Menu
எங்களை பற்றி

மருந்து கட்டுப்பாடு நிர்வாகத்துறை, தமிழ்நாடு 26.11.1981 முதல் தனித்துறையாக மருந்து கட்டுபபாடு இயக்குநரை துறைத் தலைவராகப் பெற்று மருந்து கட்டுப்பாடு நிர்வாகத்துறை எனும் பெயரில் செயல்பட்டு வருகிறத"

நிர்வாகம் திறம்பட செயல்பட இத்துறையின் கீழ் 25 மண்டல அலுவலகங்கள் (சென்னையில் 5 மற்ற பகுதிகளில் 20) மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் தங்கள் பகுதியில் மருந்துகள் தங்கு தடையின்றி கிடைப்பதினை நோக்கமாகக்கொண்டு மருந்து விற்பனை உரிமங்களை வழங்கவும்/புதுப்பிக்கவும் அதிகாரம் பெற்று இத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் நிர்வாகம் திறம்பட 2 இணை இயக்குநர்கள் மற்றும் 2 துணை இயக்குநர்களையும் இத்துறை பெற்றுள்ளது.

இத்துறையில் 15 மூத்த மருந்தாய்வாளர் (ம) 146 மருந்து ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 140 மருந்தாய்வாளர்கள் 12 மூத்த மருந்தாய்வாளர்கள், உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர்களின் கீழ் மண்டலங்களிலும், 3மூத்த மருந்தாய்வாளர்கள் (ம) 6 மருந்தாய்வாளர்கள் மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலகத்திலும் பணியாற்றுகின்றனர். மொபைல் வேனுடன் கூடிய புலனாய்வு பிரிவு துணை மருந்து கட்டுப்பாடு இயக்குநர் பொறுப்பில் உள்ளது. சட்ட சிக்கல்களை கையாள ஒரு சட்ட ஆலோசகருடன் 6 மருந்தாய்வாளர்களும் புலனாய்வு பிரிவில் செயல்பட்டு வருகின்றனர். மருந்துகள் தரமானதாகவும் தட்டுப்பாடின்றியும் சரியான விலையில் கிடைத்திடுவதை உறுதி செய்வது இத்துறையின் பிரதான நோக்கமாக கொண்டு மருந்து (ம) அழகுசாதனச் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945 இன் படி செயல்படுகிறது. மருந்து ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட மாதிரிகளை முழு பகுப்பாய்வு செய்வதற்காக மருந்து ஆய்வுக் கூடம் இத்துறையுடன் இணைந்து 01.04.1982 முதல் செயல்பட்டு வருகிறது.

தகுதிகள்

மருந்துகள் விதிகள் 1945, விதி 49 மருந்து ஆய்வாளரின் தகுதிகள் குறித்து கூறுகிறது.

கடமைகள் மற்றும் பொறுப்புகள்

மருந்துகள் விதிகள் 1945 விதி 51 மற்றும் 52 முறையே விற்பனை (ம) உற்பத்தி தொடர்பான கடமைகளை விளக்குகிறது.

போலி மருந்துகள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் தலைமையில் நடமாடும் ஆய்வு குழு மதுரையில் இயங்கி வருகிறது.

மருந்துகள் (ம) அழகு சாதனப் பொருள்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழுங்குபடுத்த பின்வரும் சட்ட நடவடிக்கைகளை இத்துறை மேற்கொள்கிறது.

1. மருந்துகள் (ம) அழகு சாதனச் சட்டம் 1940 மற்றும் விதிகள் 1945

மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி (ம) விநியோகம் ஆகியவற்றை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது. மருந்துகள் (ம) அழகுசாதனப் பொருள்களில் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின்படி செயல்படாதவர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

2. மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை 2013:

மருந்து நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்கப்படுவதை உறுதி செய்கிறது. மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைத்திட வழி செய்கிறது. தட்டுப்பாடு ஏற்படுத் பட்சத்தில் உற்பத்தியாளரை அணுகி தட்டுப்பாட்டை சரி செய்கிறது.

3. மருந்துகள் (ம) மாயத் தீர்வு சட்டம் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்):

இச்சட்டத்தின் கீழ் மருந்துகள் தொடர்பான தவறான விளம்பரங்கள் செய்வோர் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது.

4. போதை மருந்துகள் (ம) மனோவியல் பொருள்கள் சட்டம் 1985:

உடல்நல கேடுகளை ஏற்படுத்தும் போதைப் பொருள்களைத் தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கவும் இச்சட்டம் செயல்படுகிறது.

சட்டத்தை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  மருந்து கட்டுப்பாடு இணை இயக்குநர் (புலனாய்வு பிரிவு)

எண். 359, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 06. மின்னஞ்சல்: tndcad@gmail.com Phone No-24335068, Fax-24321830




நிறுவன விளக்கப்படம்
chart