மருந்துகள்- செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
- செய்ய வேண்டியவை
- உரிமம் பெற்ற சில்லறை மருந்துகடைகளிலிருந்துமட்டுமே மருந்துகளை வாங்கவும்.
- உங்கள் மருந்துகளுக்கான விற்பனை விலைப்பட்டியலைபெறுங்கள்.
- உங்கள் மருந்துகளை குளிர்ந்த, இருண்ட மற்றும் உலர்ந்த இடத்தில் வைக்கவும்.
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக இருந்தால் அவற்றை முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்
- தயவுசெய்து விலையை சரிபார்க்கவும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டால் மருந்து அதிகாரியிடம் புகார் அளிக்கவும்.
- அனைத்து மருந்துகளையும் குழந்தைகளுக்கு எட்டாமல் வைத்திருங்கள்.
- நீங்கள் மருந்து வாங்கும் போது உற்பத்தி தேதி, தொகுதி எண், காலாவதி தேதி ஆகியவற்றை சரிபார்க்கவும்.
- செய்யக் கூடாதவை
- மருந்துகளை சமையலறை அல்லது குளியலறையில் வைக்க வேண்டாம்
- மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது மது அருந்தக்கூடாது, ஏனெனில் அது தீங்கு விளைவிக்கும்.
- அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் உங்கள் மருந்துகளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாம்.
- உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி நீங்களாகவே மருந்துகளை நிறுத்த வேண்டாம் .
- மருந்து சேதமடைந்ததாகவோ அல்லது நிறம் மாறி இருந்தாலோ, அதை உட்கொள்ள வேண்டாம்.அத்தகைய சந்தர்ப்பத்தில் மருந்து அதிகாரியிடம் புகார் அளிக்கவும்.
- சுயமருத்துவம் வேண்டாம்..
- தயவுசெய்து உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கவும்..
- பிற பிராண்டை ஏற்க வேண்டாம்.