| சமீபத்திய செய்திகள் |
| நுகர்வோர் விழிப்புணர்வின் |
| செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை |
| செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை |
| தரமற்ற மருந்துகளின் பட்டியல் |
மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை, சட்டரீதியான அமைப்பாக இருப்பதால், சுகாதார சேவை விதிமுறைகளை ஆதரிப்பதிலும், நமது சமூகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இந்த அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த துறைஒரு சட்டரீதியான அமைப்பாக, போலி / கலப்படம் / தரமற்ற மருந்துகள், அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்தல், சில உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் தவறான விளம்பரங்கள் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்கிறது
மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை, இத்தகைய சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது.
நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் மருந்துகள் கிடைப்பதையும்,மருந்துகளின் தரம், பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் பகுத்தறிந்து பயன்படுத்துதல், பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தக் கூறுகளை சேகரித்தல் மற்றும் வழங்குதல்ஆகியவற்றையும், அறியாத மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக தவறான விளம்பரங்களை ஆராய்ந்து அவற்றை கண்காணிக்கிறோம்.
நாங்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து அவற்றின் தரம், தூய்மை மற்றும் பாதுகாப்பை அறியபகுப்பாய்வுசெய்கிறோம். பகுப்பாய்வை மேற்கொள்ள, எங்களிடம் சிறந்த, சட்டரீதியான ஆய்வகம் உள்ளது.
திறமை, அறிவு மற்றும் தொழில்முறை ஒருமைப்பாட்டிற்காக அறியப்பட்ட, அர்ப்பணிப்புடன் கூடிய பணிக்குழு எங்களிடம் உள்ளது.
மருந்துகளின் தரம் சாதாரண மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்டது. பொதுமக்களுக்கு தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதிசெய்வது, கள்ள சந்தை, போலி மற்றும் தரமற்ற மருந்துகள்போன்றவை இல்லாமல் இருப்பது மற்றும் மருந்துகள் கொள்கலனில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட அதிகமான விலையில் விற்கப்படாமை ஆகியவற்றைஉறுதிசெய்வது துறையின் பொறுப்பாகும்